வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வியாபார நிலையங்களுக்கு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன் பிரதிபளிப்பாக இன்றையதினம் வவுனியா நகரிலுள்ள 95 வீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தனர்.

மூடப்படாத வர்த்தக நிலையங்களுக்கு வர்த்தக சங்க உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டு வர்த்தக நிலையத்தினை மூடி ஒத்துளைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந் நிலையில் இன்றையதினம் காலை 10.00 மணியளவில் உதவித் தொழில் ஆணையாளர் தலைமையில் வர்த்தக நிலையங்களுக்கு தீடிர் விஜயம் மேற்கொண்ட குழுவினர் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாம நிதி செலுத்தப்படுகின்றதா? என பரிசோதனைகளை மேற்கொண்டனர்.