மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலையொன்றின் கட்டடப் பகுதிக்குள் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் மற்றும் அப் பகுதியிலுள்ள கோயில் ஐயர் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார். 

குறித்த வைத்தியசாலை கட்டடத்துக்குள் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க வைத்தியசாலையை சுற்றுவளைத்த பொலிஸார் இவர்கள் ஐவரையும் கைதுசெய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் கார் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர். 

அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்கள‍ை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.