மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார்.

மினுவாங்கொடை யட்டியான சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில்  68 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.