சர்­வ­தேச அளவில் பிர­பல மொட­லாக இருந்த 'சோம்பி பாய்' என்று அழைக்­கப்­படும் ரிக் ஜெனெஸ்ட் தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.

31 வய­தான ரிக் ஜெனெஸ்ட் கன­டாவைச் சேர்ந்­தவர். கன­டா­வி­லுள்ள மாண்ட்ரீ நக­ரத்தில் உள்ள அவ­ரது இல்­லத்தில் தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

உடல் முழு­வதும் பச்சை குத்­திக்­கொண்டு ஒரு சோம்­பியின் தோற்­றத்தில் மொடலிங் உல­கத்தில் தன்னை நிலை­நி­றுத்­திக்­கொண்ட ரிக் ஜெனெஸ்ட், லேடி காகா போன்ற பிர­பல பொப் பாட­கர்கள் அல்­பத்­திலும் தோன்றி இருக்­கிறார்.

ரிக் ஜெனெஸ்ட் குறித்து லேடி காகா தனது டுவிட்டர் பக்­கத்தில் வெளி­யிட்ட பதிவில், "ரிக் ஜெனெஸ்ட்டின் இந்த மரணம் பேர­ழிவைத் தாண்­டிய வலியைக் கொடுத்­துள்­ளது.
நாங்கள் இங்கு நிலவும் கலா­சா­ரத்தை மாற்ற முயற்­சித்தோம்.

மனம் சார்ந்த உள­வி­யலை முன்­னி­லைப்­ப­டுத்தி கொண்­டு­வர வேண்டும். மற்றும் இதனைப் பேசக் கூடாது என்ற களங்­கத்தை நாம் அழிக்க வேண்டும்.

நீங்கள் கஷ்­டப்­ப­டு­வ­தாக உணர்ந்தால் உங்கள் நண்­பர்கள் மற்றும் உற­வி­னர்­க­ளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.