அணு ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு கவலையளிக்கின்றது என்று வடகொரிய வெளிவிவகார அமைச்சர் ரி யொங்கோ தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீதான தடைகள் தொடரவேண்டும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக்பொம்பியோ வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமெரிக்க வடகொரிய தலைவர்கள் இடையிலான உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் வடகொரியா உறுதியாக உள்ளது. எனினும் அமெரிக்காவினால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் கவலையளிக்கின்றன.

முழுமையான அணு ஆயுத அழிப்பினை உறுதி செய்யாது வட கொரியா மீதான பொருளாதார தரடை நீக்கப்படா மாட்டாது என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக்பொம்பியோ தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.