(ஆர்.ராம்)

முன்னாள் ஜனா­தி­ப­தியின் மூத்த புதல்­வரும், அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வா­வுக்கு தனிப்­பட்ட விட­ய­மொன்­றுக்­காக தொலை­பேசி அழைப்­பொன்றை எடுத்­துள்­ளாராம். இச்­ச­ம­யத்தில் குறித்த விடயம் சம்­பந்­த­மான பேச்­சுக்கள் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதிர்க்­கட்சி சார்­பான வேட்­பாளர் தொடர்­பாக பேச்­சுக்கள் நிகழ்ந்­துள்­ளன.

அத்­த­ரு­ணத்தில் அமைச்சர் நிமல், கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வினை வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கினால் அனை­வ­ரி­னது ஆத­ர­வி­னையும் பெறு­வது கடி­ன­மாக இருப்­ப­தோடு மத்­தி­ய­தர மற்றும் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை பெறு­வதும் இல­கு­வாக இருக்­காது என்று கூறி­ய­தோடு பசில் ராஜ­ப­க் ஷவை கள­மி­றக்­கினால் ஏனை­ய­வர்கள் எத­னையும் செய்ய முடி­யாது. அனைத்­தையும் அவரே செய்து முடித்­து­வி­டுவார். ஆகவே இதற்கு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு பொருத்­த­மா­னவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரி­யாரே. அவரை கள­மி­றக்­கினால் அனை­வ­ரி­னது ஆத­ர­வையும் பெற­மு­டியும் என்று எடுத்துக் கூறி­யுள்ளார்.

எனினும் நாமல் ராஜ­ப­க் ஷ எம்.பி இந்த விடயம் சம்பந்தமாக எந்தவிதமான பதிலையும்  கூறவில்லையாம். அது தொடர்பில் பார்க்கின்றேன் என்று மட்டும் கூறினாராம்.