இன்று இரவு முதல் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த வகையில் மேல் மற்றும் தென்னிகிழக்கு கடற்பகுதிகள் இவ்வாறு காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா, சப்ரகமுவ, மேல், தெற்கு மாகாணங்களிலும் அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மணிக்கு காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றருக்கும் அதிகமாக வீசக் கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.