தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணியை பணித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.