வாதுவை பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் உணவு ஒவ்வாமையின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கப்பட்டு நால்வர் வாதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந் நிலையிலேயே இவர்களுள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 36 வயதுடையவர்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.