தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பகாவுள்ளது.

நாடு முழுவதும் இம்முறை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையக்கு தோற்றவுள்ளதுடன் இதற்காக 3050 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் பரீட்சையில் முதலாம் பகுதி காலை 9.30 மணிமுதல் காலை 10.15 மணிவரையிலும் இரண்டாம் பகுதி காலை 10.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.