நாளை புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள ஐந்தாம் தர மாணவர்கள் தம் பெற்றோருடன் அனுராதபுரம் பகுதியிலுள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பொழுது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அனுராதபுரம் பதவியா பகுதியில் அமைந்துள்ள குறித்த விகாரைக்கு வாழிபாட்டிற்காக சென்ற ஐந்தாம் தர மாணவர்கள் 40 பேர் மற்றும் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட 78 பேருமே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில் குளவி கொட்டுக்கு இலக்கான அனைவரும் தற்போது பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்ச்சைப் பெற்று வருகின்றனர்.

நாளை ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த மாணவர்கள் வழிபாட்டுக்கு சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.