(ஆர்.ராம்)

காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் ஓரிரு மாதங்களில் வன்னி பிரதேசத்திலேயே நிறுவப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 

காணமல்போனோர் பற்றி அலுவலகத்தினையும் பிராந்திய அலுவலகங்களினதும் வினைத்திறனான செயற்பாடுகளுக்காக தற்போது வழங்கப்பட்ட தொகைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பினை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தினை பெறும் அமைச்சரவை பத்திரமொன்று இம்மாத இறுதிக்குள் தயாரிக்கபடும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

காணமல்போனோர் பற்றி அலுவலகச் சட்டத்தின் பிராகாரம், நாடுமுழுவதும் 12 பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளதோடு வடக்கில் 5 அலுவலகங்களையும், கிழக்கில் 3 அலுவலகங்களையும் ஏனைய பிரதேசங்களில் 4 அலுவலகங்களையும் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.