தேர்தலின் போது வாக்குசீட்டு முறையை அ.தி.மு.க. வரவேற்கிறது என்று கருர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, 

‘சிலைக்கடத்தல் வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் சிறந்த அதிகாரி என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் சிலை கடத்தல் என்பது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் விரிந்து கிடக்கிறது.

அதனால் இதனை விசாரித்து புலனாய்வு செய்ய மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகத்தான் சி. பி .ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்ற தேர்தலின் போது மின்னணு வாக்கு பதிவு முறையைவிட வாக்கு சீட்டு முறையே சிறந்தது என்று வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளில் வாக்கு சீட்டு முறை இன்றும் பின்பற்றப்படுகிறது. அத்துடன் அ.தி.மு.க.வும் வாக்கு சீட்டு முறையை வரவேற்கிறது.’ என்றார்.