தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரால் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (04.08) காலை 10.00 மணியளவில் நீதிமன்ற உத்தரவிற்கமையாக வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் யோ. நிசாந்தன் அவர்களின் தலமையில் தீயிட்டு எரிக்கப்பட்டன.

மாமடு, வவுனியாகுளம் , பாவற்குளம் , மடுக்கந்தை போன்ற பிரதேசங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 15இலட்சம் பெறுமதியான வலைகளே இன்று தீயிட்டு கொழுத்தப்பட்டன. கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 15 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சட்டவிரோத தங்கூசி வலைகள் தீயிட்டு எரிக்கும் சம்பவத்தில் வவுனியா மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் , வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் , மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.