பிரிட்டன் வாழ் இந்தியர் உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை விளைவித்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சீக்கியர் ரக்பிர் சிங் சங்கோரா. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார்.

தற்போது பிரிட்டனின் டெர்பி நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் மத குருவாகவும், பண்ணை தொழிலும் செய்து வருகிறார்.

குறித்த நபர் தற்போது உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளார். 51 இன்ச் நீளம் வளர்ந்துள்ள இந்த வெள்ளரிக்காய் இதற்கு முன்னதாக உலக சாதனையாக கருதப்பட்ட 42 இஞ்ச் நீளத்தை முறியடித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

குறித்த வெள்ளரிக்காய் வளர தினமும் கடவுளை வேண்டி வந்ததாகவும், வளரும் பருவத்தில் அருகில் நாற்காலியிட்டு அமர்ந்து பார்த்து பார்த்து வளர்த்ததாகவும் பெருமிதமாக தெரிவித்தார்.

  கடந்த ஆண்டு 39 இஞ்ச் நீளமுள்ள வெள்ளரிக்காயை தாம் வளர்த்ததாகவும், அதில் திருப்தி அடையாததால் தொடர்ந்து முயற்சித்து தற்போது சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.