வாள் வெட்டு குழுவில் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

04 Aug, 2018 | 10:06 AM
image

யாழ். வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்று நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு அமைவாக  ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றயவர் சிசிரிவி காணொலிப் பதிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

அதனை ஆராய்ந்த மன்று சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்து அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தது.

முன்னதாக, கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளுக்குள்  புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

அத்துடன்,  வண்ணார்பண்ணை வடகிழக்கு (ஜே 100) கிராம அலுவலகரை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியமை - அவரது அலுவலக பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வேனுக்கு தீவைத்து அடாவடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு  கைது செய்யப்பட்டார்.

நான்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருவருக்கும் எதிராக தலா 2 வழக்குகள் வீதம் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

சந்தேகநபர்கள் இருவரும்,  யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமா? என அன்றைய தினம் மன்று கேள்வி எழுப்பியிருந்தது.

சம்பவ இடங்களுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராக்களின் காணொலிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சந்தேகநபர்கள் உள்ளனர். அதனடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்" என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சிசிரிவி கமரா பதிவை நேற்று வெள்ளிக்கிழமை மன்றில் முன்வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான்,  சந்தேகநபர்களின் விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலையே சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16