அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி

Published By: Daya

04 Aug, 2018 | 10:27 AM
image

அபிவிருத்தியின் பெறுபேறுகளுடன் தேசிய ஐக்கியத்தையும் சமய நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

மக்களின் வறுமையை ஒழித்து இன, மத, குல பேதங்களின்றி அனைவருக்கும் அபிவிருத்தியின் பயன்களை பெற்றுக்கொடுக்கும் பாரிய நிகழ்ச்சித் திட்டங்களை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று பிற்பகல் லங்காபுர அல்ஹிலால்புர முஸ்லிம் ஜும்ஆ பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தின் இறுதி நாளான இன்று 61 வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களினதும் அரசியல் கட்சி பேதமின்றி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பங்குபற்றுதல்களுடன் மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

6,000 கோடி ரூபா செலவில் ஐந்து வருட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மேலதிகமாக இந்த 180 அபிவிருத்தி திட்டங்கள் நேற்றும் நேற்று முன்தினமும் மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்விமான்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு நீண்டகாலமாக அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசமான பொலன்னறுவை மாவட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அம்மக்களிலிருந்து உருவான தலைவரான ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சிகளுக்கு தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தனர். 

ஜனாதிபதி தமது அரசியல் பயணத்தின் ஆரம்பத்தில் தமக்கு பக்கபலமாகவிருந்த அன்புமிக்க பிரதேச மக்களை மறந்துவிடாது அவர்களுக்காக தனது கடமைகளை நிறைவேற்றி உண்மையான தலைவரின் முன்மாதிரியான பண்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று இங்கு உரையாற்றிய அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

அந்த வகையில் பண்டைய அரசர்கள் காலத்திற்கு பின்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க பொலன்னறுவையை கட்டியெழுப்பிய தலைவராக ஜனாதிபதி  வரலாற்றில் இடம்பிடித்திருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டினர். 

இந்த மூன்று நாட்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

வைத்தியசாலை அபிவிருத்தி உள்ளிட்ட சுகாதார துறையின் வசதிகளை விரிவுபடுத்தல், வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதிகள், சமய ஸ்தாபனங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இன்றைய தினமும் மக்களிடம் கையளிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் பாடசாலைக் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், சுமார் 40 திட்டங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. 

அல்ஹிலால்புர ஜும்ஆ பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மௌலவி அபூபக்கரினால் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. அமைச்சர் றிசாத் பதியுதீன், காதர் மஸ்தான் மற்றும் மெதிரிகிரிய தொகுதி முஸ்லிம் பிரதேச ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் எம். நசார்தீன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இதேநேரம் ஹிங்குக்கமன காசியப்ப பிரிவெனாவில் 14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பிக்குகளுக்கான தங்குமிடத்துடன் கூடிய விடுதியின் கட்டட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஹபரன மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி வகுப்பறைக் கட்டடத்தையும் ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதியையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார். பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகளை வழங்கி வைத்தார். பாடசாலையின் விமுக்தி சுனெத் என்ற மாணவனினால் வரையப்பட்ட ஜனாதிபதியின் ஓவியம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அதிபர் ஈ.எம்.பி ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது. 

சாந்த பண்டார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

தமன்கடுவ பிரதேச செயலாளர் பிரிவில் வீரபுர கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் 12 மில்லியன் ரூபா செலவில் லங்காபுர மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆரம்ப கற்கை வள நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் அமைச்சர் சரத் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரத்ன, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

லங்காபுர ஜயந்தி கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டடம் மற்றும் கேகலுகம வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றை திறந்துவைக்கும் நிகழ்வுகளில் அமைச்சர் பியசேன கமகே, பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலன்னே ஆகியோர் கலந்துகொண்டனர்.

லங்காபுர கிரிமெட்டியே கனிஷ்ட வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்தொகுதி மற்றும் பட்டுனுகம புலஸ்திகம ஶ்ரீ சுதர்மாராம விகாரையின் பிக்குகள் தங்குமிடக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைக்கும் நிகழ்வுகளில் அமைச்சர் மகிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜேபால ஹெட்டிஆரச்சி, மலித் ஜயதிலக்க ஆகியோர் பங்குபற்றினர்.

தமன்கடுவ, பராக்கிரம சமுத்திர ஶ்ரீ போதிருக்காராம விகாரையில் 07 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதனை மண்டபக் கட்டடத்தை திறந்துவைத்தல் மற்றும் பராக்கிரம சமுத்திர மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதியை மாணவர்களிடம் கையளித்தல் ஆகிய நிகழ்வுகளில் அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனெவிரத்ன, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவித்தான ஆகியோர் பங்குபற்றினர்.

தீவரகம அல்மதீனா முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதி மற்றும் நெலும்புர அல்ஹிக்ரா முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஆகியன பிரதி அமைச்சர்கள் இந்திக்க பண்டாரநாயக்க, சம்பிக்கா பிரேமதாச ஆகியோரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

தமன்கடுவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சாஹிரா முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடத்தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும் 37 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் பளுகஸ்தமன மகா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் நிகழ்வுகளில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க ஆகியோர் பங்குபற்றினர். 

தமன்கடுவ அபயபுர மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நூலகம், 13 மில்லியன் ரூபா செலவில் ஹிங்குரக்தமன மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலைப்பிரிவுக் கட்டடம் மற்றும் 04 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பற் சிகிச்சை நிலையக் கட்டடம் ஆகியவற்றை பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மாணவர்களிடம் கையளித்தார். 

24 மில்லியன் ரூபா செலவில் திவுலான அல் அக்ஷா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படும் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்தொகுதியின் நிர்மாணப் பணிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

தமன்கடுவ எதுமல்பிட்டிய ஆரம்ப பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடத்தொகுதியை மாணவர்களிடம் கையளித்தல், லக்ஸ உயன சனசமூக நிலையம், லக்ஸ உயன குடியேற்ற உத்தியோகத்தர் இல்லம் ஆகியவற்றை திறந்துவைத்தல் அமைச்சர்கள் விஜித் விஜயமுனி டி சொய்ஸா, கயந்த கருணாதிலக்க ஆகியோரின் பங்குபற்றலில் இடம்பெற்றது.

லங்காபுர அல் ரிபாய் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்தொகுதியை மாணவர்களிடம் கையளித்தல், சிங்கபுர ஆரம்ப பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடத்தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தல், தமன்கடுவ குருந்துவத்த ஶ்ரீ சுமனாராம விகாரையின் அபிவிருத்தி பணிகளை திறந்துவைத்தல் ஆகிய நிகழ்வுகளில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் துசித்தா விஜேமான்ன ஆகியோர்  கலந்துகொண்டனர். 

   

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19