வவுனியா ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகரினால் ஓமந்தைப்பகுதியில் வியாபார நிலையத்தில் காலாவதியான பிஸ்கட் மற்றும் பேரீச்சம்பழம் என்பவற்றை விற்பனை செய்த வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் 13000 ஆயிரம் ரூபா தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஓமந்தைப் பொது சுகாதாரப்பரிசோதகர் தனது வழமையான செயற்பாட்டின்போது ஓமந்தைப்பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பாவனைக்கு உதவாத வண்டு மொய்த்த பேரீச்சம்பழம் மற்றும் காலாவதியான பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து  வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகரினால் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது இவ்வழக்கு விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது பாவனைக்கு உதவாத காலாவதியான பிஸ்கட் மற்றும் வண்டு மொய்த்த பேரீச்சம்பழம் போன்ற மக்கள் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த வியாபார நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இவ்விரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக 13000 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளதுடன் கைப்பற்றிய பாவனைக்கு உதவாத பொருட்களை அழிப்பதற்கும் மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.