சாவகச்சேரி, நுணாவில் மேற்கு பகுதியிலுள்ள காணியில் வைக்கப்பட்ட தீ வைக்கோல் குவியலில் பட்டு எரிந்ததில் சுமார் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அருகிலுள்ள காணியில் குப்பைக்கு தீ வைக்கப்பட்டபோது குறித்த தீ காற்றுக்கு பறந்து வைக்கோல் குவியலில் பரவியுள்ளது.

இதில் 7 வைக்கோல் குவியல்கள் எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.