போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களை சந்தித்த த.தே. கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள்

Published By: Priyatharshan

03 Aug, 2018 | 05:19 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் இன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, மாகாணசைப உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் இரண்டாவது நாளாக போராட்டத்தினை மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

இன்நிலையில் எதிர்வரும் 07 ஆம்திகதி பாராளுமன்றில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் ஒத்திவைப்பு பிரோரணையினை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இன்று கடற்தொழிலாளர்களை சந்தித்து விட்டு கருத்துத் தெரிவத்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா,

முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சமாசமும் அதனுடன் இணைந்த சங்கங்களும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை சிலிண்டர்வைத்து மீன்பிடிப்பது, மின்சாரம் ஒளிபாச்சி மீன்பிடிப்பது, வெடிவைத்து மீன்பிடிப்பது போன்ற அனுமதிக்கப்படாத உபகரணங்களை பாவித்து முல்லைத்தீவு கடலில் மீன்பிடித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இந்த கடற்தொழிலாளர்கள் போர்க்காலம் சுனாமி காலம் தொடக்கம் தற்போது வெளிமாவட்டத்தில் இருந்து வந்து தொழிலில் ஈடுபடுபவர்களாலும் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவித்து மீன்பிடிப்பதனாலும் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் போர்க்காலத்தில் படைநடவடிக்கைகளிலும் மிக பாதிக்கப்பட்டவர்கள், அந்தவகையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சமாசத்துடன் நடத்திய கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாவித்து மீன்பிடிப்பது முற்றுமுழுதாக தடைசெய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இங்கு வந்துள்ளபோதும் நான் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள பணிப்பாளர் விஜயமுனி சொய்சாவுடன் பேசியுள்ளேன். அவர் ஏற்கனவே இந்தவிடயம் குறித்து தெரிந்து கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்றில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக வாக்குறுதி தந்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி கடற்தொழில் சாமசத்துடன் பேசுவதற்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காகவும் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருடன் நாங்களும் சேர்ந்து இந்த மக்களின் நலனுக்காக தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவிக்காமல் மக்கள் சுயமாக தொழிலை சாதாரண நடைமுறைகளில் மேற்கொள்ளவும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைக்கு நாங்கள் உதவியாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58