(எம்.எம்.மின்ஹாஜ்)

அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு இறுதி தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கிடைக்க பெற்ற கோரிக்கையை ஆராய்ந்து பார்க்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்றத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் நீதிமன்றஉயர் நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு சமாந்தரமாக அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதன்படி நீதிபதி, நீதியரசர்களின் சம்பளம் அண்மையில் அதிகரிக்கப்பட்டமை அடுத்து அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிடப்பட்டது. 

ஆகவே அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை. மக்களின் பிரதிநிதிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கிடைக்கபெற்ற  கோரிக்கையை ஆராய்ந்து பார்க்குமாறு பாராளுமன்ற செயலாளரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.