''பாலியல் குற்றம் இழைப்பவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. அத்­துடன் பாலியல் வன்­முறை சம்­பந்­த­மான வழக்­கு­கள் ஒரு­வ­ரு­ட ­கா­லத்தில் விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­ப­டுதல் வேண்டும்'' என மன்னார் மாதர் ஒன்­றியம் வேண்­டுகோள் விடுத்து போராட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­துள்­ளது.

பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்கள் மற்றும் படு­கொ­லை­களைத் தடுத்து நிறுத்­தக்­கோரி மன்­னாரில் மாதர் அபி­வி­ருத்தி ஒன்­றி­யத்தின் ஆத­ரவில் பெண்கள் அமைப்பு மன்னார் நகரில் பேரணி ஒன்றை நடத்­தி­யது. அத்­துடன் பிர­தமர் உட்­பட பல­ருக்கு இது ­வி­ட­ய­மாக மக­ஜர்கள் அனுப்­பியும் வைக்­கப்­பட்­டுள்­ளன.

வெள்­ளிக்­கி­ழமை காலை மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள பல பாகங்­க­ளி­லி­ருந் தும் வருகை தந்­தி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலு­வ­லக முன்­றலில் ஒன்­று­கூடி பின் அங்­கி­ருந்து பதா­கைகள் ஏந்­தி­ய­வாறு மன்னார் நகரை வலம்­வந்து கோஷம் இட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களைக் கண்டித்துப் பேரணி நடத்தினர்.

இச் சம­யத்தில் பெண்கள் பிரிவு பொலிஸ் அதி­கா­ரி­யி­டமும் மன்னார் அர­சாங்க அதி­ப­ரி­டமும் மக­ஜர்களை நேர­டி­யாக கைய­ளித்­த­துடன் பிர­தமர் உட்­பட பல­ருக்கு மக­ஜர்கள் அனுப்­பி­வைக்­கப்­பட்­டன.

இவ் மக­ஜர்­களில் பின்­வரும் விட­யங்­களை முன்­மொ­ழி­வாக இவர்கள் முன்­வைத்­துள்­ளனர்.

அதா­வது இந்­த­நாட்டில் உள்­ள­ பெண்கள் சிறு­மி­க­ளுக்­கெ­தி­ரான பாலியல் வன்­முறை சம்­பந்­த­மான வழக்­கு­களின் சட்­ட­மா­னது மீள் திருத்­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­படல் வேண்டும். அதா­வது திருத்­தப்­படும் சட்­டத்தில் பாலியல் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிணை வழங்க முடி­யாத குற்­ற­மாக்­குதல் வேண்டும்.

பெண்கள் சிறு­மி­க­ளுக்­கெ­தி­ரான பாலியல் வன்­முறை சம்­பந்­த­மான வழக்­கு­களில் குற்­ற­மா­னது ஒரு ­வ­ரு­ட­கா­லத்தில் விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­ப­டுதல் வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களை விசா­ரிக்க ஒவ்வொரு மாவட்­டத்­திலும் சிறப்பு நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­ப­டு­வ­துடன், அந்­நீ­தி­மன்­றங்­களில் பாதிக்­கப்­பட்­டோர்­க­ளது பாதுகாப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு, அவர்­க­ளது சுயதனித்­துவம் பாதிக்­கப்­ப­டாத வகையில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்படல் வேண்டும். 'சுருக்­க­முறை ­வி­சா­ரணை'அகற்­றப்பட்டு மாவட்ட நீதி­மன்றில் அல்­லது உயர்நீதி­மன்றில் பாலியல் வல்­லு­றவு தொடர்­பான வழக்­கு­க­ளது விசா­ர­ணை­கள மேற்­கொள்­ளப்படல்.

கடந்த காலங்­களில் சட்­ட­மா ­அ­திபர் திணைக்­க­ளத்தில் ஆயி­ரக்­க­ணக்கில் தேங்­கி­யுள்ள பாலியல் வல்­லு­றவு சம்­பந்­த­மான வழக்­கு­களைத் துரி­த­ வி­சா­ர­ணை­களை நிகழ்த்­து­வதன் மூலம் தீர்ப்­ப­ளித்தல்

நீதி­யை­ அ­முல்­ப­டுத்தும் அமைப்­பு­க­ளா­கிய காவற்­றுறை, நீதி­மன்றம், சட்­ட மா அதிபர் திணைக்­களம் மேலும் நீதி­ய­மைச்சு, பெண்கள் விவ­கார அமைச்சு, சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை மற்றும் சிறுவர் பாது­காப்பு மற்றும் நன்­ன­டத்தை ஆணைக்­குழு போன்ற கட்­ட­மைப்­புகள் அனைத்தும் பெண்கள், சிறு­வர்கள் தொடர்­பாகத் தற்­போ­துள்ள நட­வ­டிக்­கை­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­துடன் இக்­கட்­ட­மைப்­பு கள் ஆன­வை­ பால்­ நிலைக் கூரு­ணர்­வுடன் எவ்­வி­த­ பார­பட்­ச­மு­மின்றிச் செயற்­படும் விதத்தில் திருத்­தப்­படல் வேண்டும்.  குறிப்­பாகத் தமிழ் மொழி­பேசும் உத்­தி­யோ­கத்­தர்­கள் உட­ன­டி­யாக நிய­மிக்­கப்­படல் வேண்டும்.  பெண்கள் உரி­மை­மீ­றல்­க­ளை­ ஆய்­வு­ செய்­வ­தற்­கா­ன­ சு­ய­மா­ன­ ஆ­ணைக்­குழு ஸ்தாபிக்­கப்­பட்டு இக்­கு­ழு­வா­னது பெண்­க­ளுக்­கெ­தி­ராக நடைபெறும் சகல வன்முறைகளைத் தடுப்பதற்கான திட்டங்களைத் துரித கதியில் அமுல்படுத்துவதற்கான அதிகாரத் தைப் பெற்றிருத்தல் வேண்டும் என வேண் டியுள்ளனர். 

இம் மகஜர்கள் நீதியமைச்சர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன் னடத்தை ஆணையாளர், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.