மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 47ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து  அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது  ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள், மண்டை யோடுகளை வெளியேற்றும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.

 அத்துடன் தற்போது அகழ்வு பணியானது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலோயே அதிக கவனம் செலுத்தி தோண்டப்படுகின்றது.

 அத்துடன் குறித்த இடத்திற்கு அருகாமையிலுள்ள நடை பாதையில் ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலேயும் அகழ்வு இடம் பெற்று வருகின்றது. 

குறித்த நிலையில் இன்றும் சந்தோகத்திற்குறிய மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளது .

குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 மேற்படி வளாகத்தின் மையப்பகுதியில் எந்த வித குழப்பமும் இன்றி ஒழுங்கான நிலையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் சிலவும் அதே நேரத்தில் வளாகத்தின் நுழைவு பகுதியில் ஓன்றுடன் ஒன்று செருகிய விதமாகவும் அவசர அவசரமாக புதைக்கபட்ட விதத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன .

தற்போது மையப்பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவில்லை எனவும் வளாகத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள மனித எச்சங்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரை குறித்த வளாகத்தில் இருந்து 66 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவறை மீட்கப்பட்ட 56 மனித எச்சங்களும் 440 பைகளில் இலக்கங்கள் இடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தின் இவ்வாரத்தில் இரண்டு மோதிரங்கள் தடைய பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடதக்கது.