வவுனியாவில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற  பொலிஸார் சடலத்தினை  மீட்டெடுத்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா சிதம்பரபுரம், கற்குளம், 2 ஆம் படிவம் பகுதியில் வசித்த வந்த பஸ் சாரதியான சந்திரகுமார் றஜீவன் 33 வயதுடைய  குடும்பஸ்தர் இன்று காலை 5மணியளவில் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

இவரது மனைவி தாதியாக பணி புரிகின்றார்.நேற்று இரவு வேலைக்கு சென்று  விட்டு இன்று காலை வீட்டிற்கு சென்ற போது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்குச் சென்ற சிதம்பரபுரம் பொலிஸார்  சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்படவிருப்பதாகவும்  குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாகவும்  பொலிஸார்  மேலும்  தெரிவித்தனர்.