நுண்கடன் நிதியை அரசாங்கம் செலுத்தும் - மங்கள

Published By: Vishnu

03 Aug, 2018 | 02:50 PM
image

வடக்கு, கிழக்கு உட்பட 12 மாவட்டங்களில் ஒரு  இலட்சத்துக்கும் குறைவாக நுண் நிதி கடன் பெற்றவர்களின் கடனை கடந்த புதன்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஐந்து வருடங்களுக்குள் அரசாங்கத்தினால் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிதி நிறுவனங்களுக்கு இதற்கான கடிதத்தை செப்டெம்பர் மாதமளவில் அனுப்பி வைக்கவுள்ளோம் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் இது குறத்து கூறுகையில்,

வடக்கு, கிழக்கு உட்­பட 12 மாவட்­டங்­களில் ஒரு இலட்­சத்­துக்கும் குறை­வாக நுண் நிதி கடன் பெற்­ற­வர்­களின் கடனை  புதன்­கி­ழமை முதல் கட்டம் கட்டமாக ஐந்து வருடங்களுக்குள் அர­சாங்­கத்­தினால் செலுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். இதன்­படி நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு இதற்­கான கடி­தத்தை செப்­டெம்பர் மாதம் முதலாம் திகதி அனுப்பி வைப்போம். நுண்­நிதி கட­னினால் அதி­க­ளவில் தற்­கொ­லை­களும் இடம்­பெற்­றுள்­ளன. வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு நாம் முக்­கி­யத்­துவம் வழங்­கி­யுள்ளோம். தற்­போது 75 ஆயிரம் பெண்கள் ஒரு இலட்­சத்­துக்கு குறை­வான கடனை பெற்­றுள்­ளனர்.  ஆகவே பெண்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­க­வுள்ளோம். அத்­துடன் வட்டி வீதத்தை முழு­மை­யாக நீக்­க­வுள்ளோம். இவ்­வ­ருடம் ஜூன் மாதத்தின் 30 ஆம் திகதி வரை­யா­கும்­போது அதற்கு முன்னர்  மூன்று மாதங்கள் வரை   கடன் செலுத்த முடி­யா­த­வர்­க­ளுக்கு  முக்­கி­யத்­துவம் வழங்­குவோம்.

நிதி நிறு­வ­னங்­க­ளிடம் கடன் பெற்­றோரின் பட்­டி­யலை இம்­மாத இறு­திக்குள் பெற்­று­த்த­ரு­மாறு கோரி­யுள்ளோம். அந்த பட்­டியல் கிடைத்­ததும் பட்­டி­யலில் உள்ள நபர்கள் உயி­ருடன் உள்­ள­னரா? என்­ப­தனை பற்றி அறி­யவும் மேலும் குறித்த நபர்­களின் தக­வல்­களை உறு­திப்­ப­டுத்­தவும் மாவட்ட செய­ல­கங்­க­ளுக்கு இந்த பட்­டி­யலை அனுப்­புவோம். அதன்  பின்னர்  செப்­டெம்பர் மாதம் அளவில் நிதி அமைச்­சினால் கடனை நீக்­கு­வ­தற்­கான கடி­தத்தை நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­புவோம். 

அதே­போன்று எதிர்­வரும் காலங்­களில் நுண்­நிதி கடனின் பாதிப்பை குறைப்­ப­தற்கு கட­னுக்­கான வட்­டியை 35 வீதத்­திற்கு மட்­டுப்­ப­டுத்த நிதி நிறு­வ­னங்­க­ளுடன் இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். அதே­போன்று நுண்­நிதி கடனை தவணைப் பணத்தை  பல­வந்­த­மாக பெற்று கொள்ளும் நோக்கில் வடக்கில் ஆவா­குழு செயற்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன. ஆகவே நுண்­நிதி கடன் பாதிப்­பினை குறைப்­ப­தற்­கான புதிய சட்­டங்­களை விரைவில் கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55