மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஆயித்தியமலை பகுதியைச் சேர்ந்த 54 வயதையுடை 8 பிள்ளைகளின் தந்தையான மாமாங்கம் சண்முகராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.