ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து சவுதி கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் 26 பொது மக்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உட்பட பெரும்பாலான பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும் அவர்களுடைய கூட்டுப் படையினரும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

ஏமன் நாட்டில் மீண்டும் மன்சூர் ஹாதி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்று சுன்னி இஸ்லாமியர்கள் கூட்டணி மேற்கத்தேய நாடுகளின் ஆதரவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகின்றது.

இந் நிலையில் ஏமன் நாட்டின் ஹூடேய்டாவிலுள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் சந்தை பகுதியில் சவுதி கூட்டணி ஹூதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 26 பொது மக்கள் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.