வீதிவிபத்துகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ; பங்களாதேசில் மாணவர்கள் பெரும்போராட்டம்

Published By: Rajeeban

03 Aug, 2018 | 11:26 AM
image

பஸ் மோதி மாணவர்கள் மரணித்த சம்பவத்தை தொடர்ந்து  பங்களாதேசில் மாணவர்கள் ஆறாவதுநாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து அந்த நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பேருந்து மோதி இரு பதின்மவயது மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்  பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளதுடன் முக்கிய வீதிகளை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எங்களிற்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் வாகனச்சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை சோதனையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைநகரின் சில பகுதிகளில் மாணவர்கள் வாகனசாரதிகளின் அனுமதிப்பத்திரத்தை சோதனையிடுவது போன்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இலக்கதகடுகளையும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமில்லாத எந்த வாகனமும் வீதியில் பயணிப்பதை நாங்கள் விரும்பவில்லை,வாகனங்களை செலுத்துவதற்கான வயதை எட்டாதவர்கள் வாகனங்களை செலுத்துவதையும் நாங்கள் விரும்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள முகமமட சிபாட்  என்பவர் தெரிவித்துள்ளார்.

டாக்காவின் ஆபத்தான வீதிகளை நிர்வாகம் செய்வதில் அரசாங்கம் காட்டி வரும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் ஆர்ப்பாட்டங்களில் தங்களை இணைத்துகொண்டுள்ளனர்.

நான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றேன் இது ஊழலை அகற்றும் என்பது எனது எதிர்ப்பு என ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்ட வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேசின் போக்குவரத்து துறை ஊழலும் அலட்சியமும் மிகுந்தது என பல காலமாக குற்றச்சாட்டுகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேசில் 2017 இல் இடம்பெற்ற வீதிவிபத்துகளில் 4200 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17