திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விஜயத்தின்போது வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நலன் தொடர்பில் அவரது புதல் வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு விசாரித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று தடவைகளுக்கும் அதிகமாக திருப்பதி வெங்கடாசலபதியை வழிப்படுவதற்கு இந்தியாவுக்கு சென்றுள்ளமை விசேட அம்சமாகும்.