கிளி­நொச்சி கண்­டா­வளைப் பிர­தே­சத்தில் அரச மற்றும் தனி­யா­ருக்கு சொந்­த­மான 88 ஏக்கர் காணி­யினை இரா­ணுவம் சுவீ­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றது எனக்கண்­டா­வளைப் பிர­தேச செயலர் ரி.குமுந்தன் தெரிவித்துள்ளார்.

கிளி­நொச்சி கண்­டா­வளைப் பிர­தே­சத்தில் ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கிளி­நொச்சி தர்­ம­பு­ரத்தில் அமைந்­துள்ள நெசவு நிலைய மண்­ட­பத்தில் இணைத்­த­லை­வர்­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன், மாவை சேனா­தி­ராசா, இ.அங்­கஜன் ஆகியோர் தலை­மையில் நடை­பெற்றது. இக்­கூட்­டத்தில்

காணி விடயம் தொடர்­பாக ஆரா­யப்­பட்டது. கிளி­நொச்சி கண்­டா­வளைப் பிர­தே­சத்­திற்கு உட்­பட்ட கோரக்­கன்­கட்டு வை.எம்.சி.ஏ. காணி, புளி­யம்­பொக்­கணைச் சந்­திக்­காணி, நெத்­த­லி­யாற்­றுப்­ப­கு­தியில் உள்ள தனியார் காணி உள்­ளிட்ட காணிகள் இரா­ணு­வத்­தி­னரின் பயன்­பாட்டில் இருந்து வரு­கின்­றன.

இவற்றை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என வட­மா­காண சபை உறுப்­பினர் சு.பசு­ப­திப்­பிள்ளை கருத்து தெரி­வித்­த­தை­ய­டுத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் இரா­ணு­வத்­தி­னரின் ஆக்­கி­ர­மிப்­புக்கள் நீக்­கப்­ப­ட­வேண்டும். குறிப்­பாக பொது­மக்­களின் காணி­களில் இருந்து இரா­ணுவம் வெளி­யேறி காணி­களை உரி­ய­வர்­க­ளிடம் கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அதை தீர்­மா­ன­மா­கவும் தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து கருத்து தெரி­வித்த கண்­டா­வளைப் பிர­தேச செயலர், இரா­ணு­வத்­தினர் கண்­டா­வளைப் பிர­தே­சத்தில் 88 ஏக்கர் காணி­களைச் சுவீ­க­ரிப்­ப­தற்கு தொடர்ந்தும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றனர். அதற்­கான அனு­ம­திகள் வழங்­க­வில்லை என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

கண்­டா­வளைப் பிர­தே­சத்தில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள எண்­ணா­யி­ரத்து 55 குடும்­பங்­களில் 956 குடும்­பங்கள் சொந்தக்காணிகள் இன்றி கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் தகுதிகளைக் கொண்டிருந்தும் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.