இலங்கையில் சீனாவின் முதலீடு அதிகரிப்பது குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது என இந்து நாளிதழின்  பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசினஸ்லைன் மேலும் தெரிவித்துள்ளதாவது

சீனா இலங்கையின் துறைமுகங்களில் முதலீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள அதேவேளை இந்தோ பசுவிக்கில் கால்பதிப்பதற்கு தனது அயல்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை  இந்தியா கரிசனையுடன் பார்க்கின்றது.

சீனா சமீபத்தில் கடற்படை கலமொன்றை வழங்கியிருந்தது.

ஆசியாவின் இரு வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் மோதிக்கொள்ளும் களமாக இலங்கை  உருவெடுத்துள்ளது என இந்திய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் சீனாவும் இலங்கையின் துறைமுக அதிகார சபையும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சீனா இலங்கைக்கு சமீபத்தில் வழங்கிய கடற்படை கப்பல் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகாத போதிலும் சீனா 053 வகை கடற்படை கப்பலை அல்லது சீ 28 பி அல்லது சீ13 வகை கப்பலை வழங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா இந்த வகை யுத்த கப்பல்களையே உலக நாடுகளிற்கு ஏற்றுமதி செய்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்து சமுத்திரத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் சீனாவின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்கவேண்டும் என தெரிவிக்கும் அதிகாரிகள் அதேவேளை இராணுவரீதியிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் இவ்வாறான கப்பல்கள் வழங்கப்படுவது வழமை  இந்தியாவும் இவ்வாறான கப்பல்களை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையின் துறைமுகங்களிற்கான நிதியை வழங்குவதன் மூலம் சீனா அதிவேக இலாபத்தை பெறலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் பல திட்டங்களிற்கு இலங்கையில் கண்டனம் எழுந்துள்ளது, இலங்கையை இராணுவ நோக்கங்களிற்கான தளமாக பயன்படுத்தலாம் என அமெரிக்கா இந்தியா உட்பட பல நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

அடுத்த மூன்று வருடங்களில் சீனா இந்தியாவிடமிருந்து இலங்கை புதிய முதலீடுகளை பெறவுள்ளது.

இந்தியா இலங்கையின் வடக்கில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு 400 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக சீனா மேலதிகமாக 974 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.