வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று  ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சீன அரசாங்கத்துடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் நோயாளர்கள் பலரும் விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிச் சேவை மட்டுமே இன்று தொழிற்படுகின்றதுடன், ஏனைய வைத்திய சேவைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.