"பலா­லி­­ விமான சேவையை முன்­னெ­டுக்க இந்­திய விமான நிறு­வ­னங்கள் குறித்து ஆராய்­கிறோம்"

Published By: Vishnu

03 Aug, 2018 | 09:00 AM
image

இலங்கை அர­சாங்­கத்தின் கோரிக்­கையின் பிர­காரம்  பலாலி விமான நிலை­யத்­தி­லி­ருந்து விமான சேவையை முன்­னெ­டுக்க முடி­யு­மான சில இந்­திய விமான சேவை நிறு­வ­னங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம் என்று இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்து தெரி­வித்தார்.  

கொழும்பில் நேற்று நடை­பெற்ற பீம்ஸ் டெக் கூட்­டு­றவு மாநாட்டு அமர்வில்   கலந்­து­ கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.   

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்; 

இந்த பீம்ஸ் டெக்  அமைப்பின் முக்­கிய நோக்­க­மாக மக்­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்பே காணப்­ப­டு­கின்­றது.   இலங்­கை­யுடன் எமக்கு பாரிய தொடர்­புகள் உள்­ளன. சிறி­லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­ன­மா­னது  இந்­தி­யாவின் 14 நக­ரங்­க­ளுக்கு  தனது சேவையை மேற்­கொள்­கின்­றது. அதே­போன்று இந்­தியா இலங்­கையின் உட்­கட்­ட­மைப்பு    மற்றும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களில்   பங்­காள­ராக இருக்­கி­றது.  

இலங்­கையின் ரயில்வே பாதை­களை மேம்­ப­டுத்தும் நோக்கில் 1.3 பில்­லியன்  டொலர்கள்  உதவி வழங்­கி­யுள்­ளது.   கொழும்பு துறை­மு­கத்தின் 70 வீத­மான மாற்­றீ­டு­க­ளுடன்  இந்­தியா தொடர்புபட்­டுள்­ளது.   காங்கேசன்துறை   துறை­மு­கத்தை  புன­ர­மைக்க இந்­தியா கட­னு­தவி வழங்­கி­யுள்­ளது.  அது  எதிர்­கா­லத்தில்  சிறந்த வர்த்­தக துறை­மு­க­மாக இருக்கும்.  இலங்கை அர­சாங்­கத்தின் கோரிக்­கையின் பிர­காரம்  பலாலி விமான நிலை­யத்­தி­லி­ருந்து  விமான 

சேவையை   முன்­னெ­டுக்கும் நோக்கில் சில இந்­திய விமான சேவை நிறு­வ­னங்­க­ளுடன் கலந்­து­ரை­யாட  எதிர்­பார்க்­கின்றோம். 

கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்­கையும் இந்­தி­யாவும் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை செய்­து ­கொண்­டது. அது இரண்டு நாடு­க­ளுக்­குமே முதல் அனு­ப­வ­மாக இருந்­தது. அதன் ­பின்னர் இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான  வர்த்­தக தொடர்பு  8 மடங்கு அதி­க­ரித்­தது.  அந்த வர்த்­தக உடன்­ப­டிக்­கையை மேலும் விரி­வு­ப­டுத்த நாம் எதிர்­பார்க்­கின்றோம்.   இலங்­கையில் என்ன நடந்­தாலும் முத­லா­வ­தாக  ஈடு­ப­டும் ­நா­டாக இந்­தியா இருக்­கி­றது. கடந்­த­ வ­ருடம்    இலங்­கையில்  வெள்ளம் ஏற்­பட்­ட ­போது   சில மணி­நே­ரங்­களில் இந்திய கப்பல்கள்  இலங்கையை வந்தடைந்தன.  அதேபோன்று  வரட்சியின் போதும்   எமது நிலைப்பாடு அவ்வாறே இருந்தது.   இரண்டு நாடுகளுக்குமிடையிலான பங் காண்மையின் பெறுமதி மூன்று பில்லியன் டொலர்களாகும்  அதில் 500 பில்லியன் டொலர்கள் உதவியாகும்.   இலங்கையின்  முக்கியத்துவத்திற்கு ஏற்பவே  நாங்கள் உதவிகளை வழங்குகின்றோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55