ஒரு கோடி ரூபா பெறுமதியான 878 கிரோம் ஐஸ் எனப்படும் விலை உயர்ந்த போதைப் பொருளுடன் ஒருவரை புறக்கோட்டைப் பகுதியில் வைத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 30 வயதுடைய இந்திய நாட்டுப் பிரஜை எனவும் அவரிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.