நல்லாட்சிக்கு எதிராக கொழும்பை அதிர வைத்த 'ஜனபல சேனா'

Published By: Vishnu

02 Aug, 2018 | 07:53 PM
image

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஜனபல சேனா' ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

தற்போதைய அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி விகாரமாதேவி பூங்கா வரை சென்றது. இதில் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்க கூடாது, பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டதுடன் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தலை நிறுத்துங்கள், இந்த அரசாங்கம் எமக்கு வேண்டாம், நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே ஆகிய கோஷங்களும் எழுப்பப்பட்டன.

விகாரமாதேவி பூங்கவில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38