யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இதுவரை 11 பேரை கைதுசெய்துள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மனிப்பாய் மற்றும் சுண்ணாகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து நான்கு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தொடர்ந்தும் யாழ். மாவட்டத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.