முல்லைத்தீவு மாத்தளன் பிரதேசத்தினை சேர்ந்த மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

மாத்தளன் சந்தியில் கடற்தொழிலாளர்கள் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட மக்கள் ஒன்றினைந்து இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்போது அரசே தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்துங்கள். சட்டரீதியான அனுமதிக்கப்பட்ட தொழில்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்குக. மாவட்ட கடற்தொழில் அமைப்பு தலைவரின் தன்னிச்சியான செயற்பாடுகளை நிறுத்தி பதவி விலகவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன்போது இவர்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்று மாவட்ட கடற்தொழில் அமைப்பின் உப தலைவர் எஸ்.ஜெயசீலனிடம் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் மற்றும் அரசாங்க அதிபருக்கான மனுவினை கையளித்துள்ளார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த இரணைப்பாலை கிராமிய கடற்தொழில் அமைப்பின் தலைவர் வி.மணி அவர்கள்,

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பின் தலைவர் நீண்டகாலம் தன்னிச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். நிர்வாக கூட்டத்தினை கூட்டுமாறு பலதடவைகள் தெரிவித்த போது அவர்கள் நிர்வாகத்தினை கூட்டவில்லை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் வடக்கில் இருக்கும் கடற்தொழிலாளர்களை கொண்ட பகுதிற்கு மேற்பட்ட சங்கங்களை கொண்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் .

முல்லைத்தீவு நகரை அண்டிய கடற்தொழிலாளர்கள்  நினைக்கின்ற தொழிலைதான் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொண்டுவரவேண்டும் என்பது அவர்களின் தன்மை நாங்கள் கிராம புறங்களில் இருப்பவர்களால் நாங்கள் கதைப்பவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

கடற்தொழில் நடவடிக்கையின் வளர்ச்சியினை விரும்பாத சிலர் அரசாங்கத்தினால் அங்கிகரிக்பப்பட்ட தொழில் நடவடிக்கையினை தடைசெய்யவேண்டும் என்று கோரிவருகின்றார்கள் மாத்தளன் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அட்டைத்தொழிலை மேற்கொண்டேன் அது தடைசெய்யப்பட்ட தொழில் என்றார்கள் நான் தொழிலை  விட்டுவிட்டேன் இதனால் எனது பெருமளவான முதல் முடங்கிவிட்டது. 

இந்நிலையில் இன்று மாகாணசபையில் அனுமதியுடன் கடல் அட்டைபிடித்து ஏற்றுமதி செய்வதற்கு அட்டைபிடிப்பதற்கு பயிற்சி தரப்போவதாக அறிகின்றேன் இவ்வாறுதான் கடற்தொழில் நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது. 

அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தொழில் நடவடிக்கையினை முதலில் வேண்டாம் என்று சொல்வார்கள் பின்னர் அனைவரும் செய்வார்கள் இவ்வாறுதான் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்களின் பிரச்சனை காணப்படுகின்றது. என்றும் தெரிவித்த அவர்.

இதேவேளை லைலா வலை எனப்படும் சுருக்குவலையினை பயன்படுத்தியே சட்டத்திற்கு அமைவாக நாங்கள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம் எங்களை நாம்பி எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த சுருக்குவலையினை முல்லைத்தீவு மவாட்டத்தில் தடைசெய்ய கோருபவர்களால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நந்திக்கடல் மற்றும் சாலை கடல்நீர் ஏரிகளை புனரமைத்து கொடுத்தால் கடற்தொழிலாளர்களுக்கு தொழில் நடவடிக்கைக்கு பஞ்சம் இருக்காது .

கடல் நீர் ஏரிகளை நம்பி வாழும் குடும்பங்கள் என்று பெருங்கடல் தொழில் செய்யமுயாத நிலையில் காணப்படுகின்றார்கள் குறித்த ஏரிகள் வற்றிவிட்டன இவ்வாறான நிலையில்தான் முல்லைத்தீவு கரையோர பகுதியில் வடக்கு பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் காணப்படுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.