(எம்.எம்.மின்ஹாஜ்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை மீண்டும் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். பல்கலைகழகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

'சுவசெரிய' அம்பியுலன்ஸ் சேவை, கம்பெரலிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்படி இரு நாட்கள் அங்கு தங்கியிருந்து அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார். இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தார்.

வடக்கு விஜயத்தை அடுத்து கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாளைமறுதினம் சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். பல்கலைகழகத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வு கிளிநொச்சி, அறிவியல் நகரில் காலை 10.45 மணிக்கு நடைபெற்றவுள்ளமை குறிப்பிடதக்கது.