பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்தால் கூட்டு எதிரணி கிளர்ந்தெழும் !

Published By: Vishnu

02 Aug, 2018 | 04:42 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

மக்கள் வாழ்வாதார சிரமங்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க் கட்சி அதற்கு எதிராக கிளர்ந்தெழும் என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாநாயகம் பற்றி பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஜனநாயகத்தின் ஆரம்ப தத்துவங்களையும் இல்லாது செய்துள்ளது. 

வடக்க, கிழக்கு மக்களின் ஜனநாயத்தை உரிய முறையில் உறுதிசெய்வதற்காகவே அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் 13 ஆம் திருத்தத்தின் ஆரம்ப அம்சங்களையும் நல்லாட்சி அரசாங்கம் மீறியுள்ளது. 

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஏனெனில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வாழும் மாகாண சபைகளின் ஜனாநாயகம் மீறப்படுகின்ற இந்த  சந்தர்ப்பத்தில் அவர் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கிறார். எனவே அவர் பதிவி வலகி நாட்டில் ஜனநாயகத்தை பேணக்கூடிய எதிர்க்கட்சிக்கு அப்பதவியை வழங்க வேண்டும்.

இந் நிலயைில் மக்கள் வாழ்வாதார கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க்கட்சி அதற்கெதிராக கிளர்ந்தெழும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01