எட்ஜ்பேஸ்டனில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து இந்திய அணிகளிற்கு இடையிலான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 287 ஓட்டங்களிற்கு தனது சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

நேற்று முதல் நாள் ஆட்டமுடிவில் 9 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்த இங்கிலாந்து அணி இன்று மேலதிகமாக இரண்டு ஓட்டங்களை மாத்திரம் பெற்று தனது இறுதி விக்கெட்டையும் இழந்தது.

இன்று குரான் சமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சமி முதல் இனிங்சில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தின் முதல் இனிங்சில் ரூட்  80 ஓட்டங்களை பெற்றார்.