வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பில்லை; இம்ரான்கான்

Published By: Digital Desk 4

02 Aug, 2018 | 03:55 PM
image

இம்ரான்கானின் பதவியேற்பு நிகழ்விற்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்புவிடுக்க இம்ரான் கான் முன்பு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது குறித்த முடிவை கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெற்றது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

இதனையடுத்து மற்ற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ள நிலையில் இம் மாதம் 11 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்திருந்தார்.

சார்க் நாடுகளின் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் விரும்பினார். எனினும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி தேவை என்பதால் அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பதவியேற்பு விழாவை உள்ளூர் தலைவர்களை மற்றும் அழைத்து எளிமையாக நடத்த பிடிஐ கட்சி முடிவு செய்துள்ளது. 

இம்ரான் கான், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இம்ரான் கான் விடுத்த அழைப்பை, சித்து ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07