(ரவிகலைச்செல்வன்)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக் தமிழில் உரையாடிய  காணொளி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பகிர ஆரம்பித்துள்ளது.

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி  285 ஓட்டங்களுக்கு  9 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.

இந் நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவர்களுக்கு 60 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பறியதோடு தனது அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார் அஸ்வின்.

அஸ்வின் பந்து வீசும்போது  விக்கெட் காப்பளராக செயற்ப்பட்ட  தினேஷ் கார்த்திக், அஸ்வினின் பந்து வீச்சை ஊக்குவிக்கும் வகையிலும்  இங்கிலாந்து வீர்ரகளில் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அந்த காணொளியில் தினேஷ்கார்த்திக், அஸ்வினிடம் "டேய் டேய் டேய் வேற மாதிரி டா நீ.போடுறா மாமா நல்லாருக்கு அஷ்வின். போடு மாமா. போடு மாமா. அடுத்த மூணு பாலையும் அப்படியே போடு. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின். ரொம்ப கிட்ட வேண்டாம், இவனுக்கெல்லாம் சாதரணமா பால் போடு, ஒரு ரன் போன பரவாயில்ல. கால்ல பட்டா காலி. பொறுமையா பால் போடு அஷ்வின்” என்று கூறி அஷ்வினை உற்சாக படுத்தினார் தினேஷ் கார்த்திக்.