(எம்.மனோசித்ரா)

வியாபார நிலையமொன்றில் சுமார் 12 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணனிகள் கொள்ளையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது கைதுசெய்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகிசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 17 கையடக்க தொலைபேசிகளும் 3 மடிக்கணனிகளும் என்பனவும் கைப்பற்றப்பட்டதுடன் இவர்கள் தெஹிவளை, மாத்தறை மற்றும் ரன்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.