இந்தியாவின், பீகார் மாநிலத்தின் முன்கர் மாவட்டத்தில் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

குறித்த இந்த மூன்று வயதுடைய பெண் குழந்தையானது வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்தபோது திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்துள்ளது.

இதயைடுத்து குழந்தையை மீட்க மீட்பு படையினர் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் ஓரப் பகுதியில் இயந்திரம் மூலமாக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு குழந்தையை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க குறித்த கிணற்றுக்குள் ஒட்சிசின் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 31 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளினால் நேற்று மாலை அந்த குழந்தை உயிருடன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளது.