தங்களது முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி 

Published By: Daya

02 Aug, 2018 | 10:55 AM
image

பிரிட்டன் ஜோடி தங்களது முதலிரவை வீடியோ எடுக்க 1.80 இலட்சம் ரூபா சம்பளம் தர தயார் என்ற அறிவிப்புடன் ஆள் தேடி வருகின்றனர்.

செப்டெம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தங்களின் முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை  என  இணையதளம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த ஜோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இரவு 1 -3 மணி வரை வேலை நேரம் எனவும், இதற்காக 1.80 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காதலிக்க தொடங்கிய போதே, திருமணம் செய்த பின்னர் முதலிரவை வீடியோ எடுக்க வேண்டும் என நாங்கள் இருவரும் உறுதி அளித்துக்கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் முதலிரவும் ஒன்று. அதனால் தான் திருமண வீடியோ போல முதலிரவையும் வீடியோ எடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

ஆனால், எங்களின் இந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபரும் முதலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டார். இது கொஞ்சம் அசௌவுகரியத்தை ஏற்படுத்தும் அறிவிப்புதான். எனினும், யாரேனும் முன்வருவார் என காத்திருக்கிறோம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right