வவுனியா – ஓமந்தையில் மது போதையில் வந்த இரு இளைஞர்களினால் நான்கு முச்சக்கர வண்டிகளின் கண்ணாடிகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை வவுனியா ஓமந்தை சந்தியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு மது போதையில் வந்த இரு இளைஞர்கள் அங்கு நின்ற முச்சக்கரவண்டி சாரதிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு தரித்து நின்ற நான்கு முச்சக்கர வண்டிகளின் முன் கண்ணாடி உட்பட அனைத்து கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு தப்பிக்க முயன்ற வேளை அங்கு வந்த பொலிஸாரினால் விரட்டி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.