வாள்­வெட்டு சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த மோட்டார் சைக்கிள் படை­யணி

Published By: Vishnu

02 Aug, 2018 | 09:06 AM
image

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்­று­வரும் வாள்­வெட்டு மற்றும் கொள்ளை சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த விசேட மோட்டார் சைக்கிள் படை­யணி கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தாக யாழ். உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் தெரி­வித்­துள்ளார்.

யாழ்.குடா­நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்­று­வரும் வாள்­வெட்டு மற்றும் கொள்ளைச் சம்­ப­வங்கள் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில், யாழ்ப்­பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்­னாகம் ஆகிய பொலிஸ் பிரி­வு­களில் விசேட ரோந்து நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, சுமார் 10 மோட்டார் சைக்­கிள்கள் அடங்­கிய விசேட பொலிஸ் அணி­யொன்று  கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை 100 இற்கும் அதி­க­மான சிவில் உடை தரித்த பொலிஸார்  கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், ஓரிரு வாரங்­க­ளுக்குள் குறித்த குற்­றச்­செ­யல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டு சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளார்கள் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். 

எனினும் பொலி­ஸாரின் செயற்­பாட்­டுக்கு பொது­மக்கள் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென்றும் வாள்­வெட்டுக் கும்­பல்கள் தொடர்பில் தக­வல்கள் தெரிந்­த­வர்கள் பொலி­ஸா­ரிற்கு தக­வல்­களை வழங்­கு­வதன் மூலம் விரைவில் அவர்­களை கைது­செய்து சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

குறிப்­பாக நேற்று முன்­தினம் கிராம அலு­வலர் மீது வாள்­வெட்டு தாக்­குதல் நடந்­ததாக சில ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், எனினும் குறித்த கிராம சேவை­யாளர் அலு­வ­லகம் இயங்கும் வாடகை வீட்டில் முன்னர் வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளுடன் தொடர்­பு­டைய ஒருவர் வசித்து வந்­த­தா­கவும், அவர் மீது தாக்­குதல் நடத்­தவே வந்த குழு­வினர் கிராம சேவை­யா­ளரின் அலு­வ­ல­கத்தை சேதப்­ப­டுத்­தி­ய­துடன், அவ­ரையும் அச்சுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் உரிய தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையால், விரைவில் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12