முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்ட விரோத மரக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த  பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் வீடொன்றிலிருந்து சட்டவிரோதமாக மரங்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கிணங்க குறித்த வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார் சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்கள், உழவு இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டின் உரிமையாளர் தப்பி ஓடிவிட்ட நிலையில் வீட்டின் குடும்ப பெண்ணை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.