தென்னாபிரிக்க அணிக்கு எதிரனா இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமானது.

கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமான இரு அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றியீட்டி, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் இன்று இடம்பெறும் இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானத்தார்.

அதன்படி முதலாவதாக களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களான உபுல் தரங் மற்றும் திக்வெல்ல ஆகியோர் இணைந்து 13 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். அதற்கிணங்க முதலாவது ஓவரில் நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்ட இலங்கை அணி இரண்டவது ஓவரில் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை இலங்கை அணிக்காக பெற்றுக் கொடுத்த உபுல் தரங்க லுங்கி நிகிடியின் ஐந்தாவது பந்து வீச்சில் டிகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் புகுந்த குசல் மெண்டீஸும் லுங்கி நிகிடியின் அடுத்த பந்தில் டக்கவுட் முறையில் முறையில் வெளியேற இலங்கை அணி தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும் அதன் பின்னர் இணைந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் பெரேரா ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.

எனினும் 11 ஓவரில் இலங்கை அணி 56 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 12 ஓட்டங்களுடன் குசல் பெரோ ஆட்டமிழந்தார். அதன் பின்னர் திக்வெல்லவுடன் கை கோர்த்த மெத்தியூஸ் சிறப்பாக திக்வெல்லவுக்கு தோல் கொடுத்தார்.

இதன்படி திக்வெல்ல 19 ஓவரின் போது சம்ஸியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசி 58 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன் பின்னர் இலங்கை அணி 20.2 ஓவருக்கு 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதன் பின்னர் திக்‍8வெல்ல 78 பந்துகளை எதிர்கொண்டு பத்து நான்கு ஓட்டங்கள் அடங்களாக 69 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை 25.2 ஓவரில் பெலுக்கொயோவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய செஹான் ஜெயசூரிய 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 36 ஆவது ஓவரின் போது 71 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். திஸர பெரோ 19 ஓட்டங்களை பெற்றிருந்த போது லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் டிகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறி கொடுத்தது.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இந்து 244 ஓட்டங்கள‍ை பெற்றுக் கொண்டது. இறுதி வரையும் ஆட்டமிழக்காது களத்திலிருந்து அணித் தலைவர் மெத்தியூஸ் 111 பந்துகளில் ஆறு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 79 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் ரபடா 48 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினையும் லுங்கி நிகிடி 50 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களையும் பெலுக்கொயோ 44 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களையும் முல்டர் 26 ஒட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதன் மூலமாக தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 245 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 245  என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கையின் பந்து வீச்சினை எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடையுமா? அல்லது மண்டியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.