இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின், யாதகிரிகுட்டா நகரில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல விபச்சார விடுதிகளிலிருந்து 11 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதோடு சம்பவத்தோடு தொடர்புடைய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட 11 சிறுமிகளில் 4 சிறுமிகள் 7வயதிற்கும் கீழ்பட்டவர்கள் எனவும் மூன்றரை வயதான ஒரு சிறுமியும் உள்ளடங்குகின்றனர்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 வயது சிறுமிக்கு 25,000 ரூபா பெறுமதியான பாலியல் உணர்வை தூண்டும் ஹோர்மோன் ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக மீட்கப்பட்ட சிறமிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையிலிருந்து தெரிய வந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுமிகளுக்கு குறித்த ஹோர்மோன் ஊசியை ஏற்றிய குழந்தை நல வைத்தியர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வைத்திய பரிசோதனையின் பின்னர் சிறுமிகள் அரச சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.